search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி மலை ரெயில்"

    நீலகிரி மலை ரெயிலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில்வேக்கு 54 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    புதுடெல்லி:

    தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரெயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பேசிய ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா, நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் 54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீலகிரி மலை ரெயிலை இயக்கியதன் மூலம் ரெயில்வே துறைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல், கடந்த 2016 -17ம் ஆண்டில் 26.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவோம் எனவும் தெரிவித்தார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரியில் உள்ள குன்னூர் மலைக்கு இயற்றப்பட்ட மரப்பெட்டி கொண்ட ரெயில் பெட்டிகளை ஸ்டீல் பெட்டிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் யுனெஸ்கோவின் ‘உலக பாரம்பரிய வன தளங்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    இந்த மலைரெயில் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு குன்னூருக்கு செல்கிறது. மீண்டும் அங்கு இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேர்கிறது. இதுவரை மலை ரெயிலில் உள்ள பெட்டிகள் அனைத்தும் மரத்தால் ஆனது. மரப்பொட்டிகள் சராசரியாக 30 முதல் 90. ஆண்டுகள் பழைமையானது.

    இதனை ஸ்டீல் பெட்டிகளாக மாற்ற சேலம் ரெயில்வே கோட்டம் முடிவு செய்தது. இது குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பட்டது. இதனை பரிசீலனை செய்த ரெயில்வே நிர்வாகம் சென்னையில் உள்ள ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு 28 பெட்டிகள் தயாரிக்க உத்தரவிட்டது.

    இது குறித்து சென்னை ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் முதன்மை பொறியாளர் சுபரான்ஷூ கூறியதாவது:-

    உலக புகழ்பெற்ற நீலகிரி மலை ரெயிலுக்காக ஸ்டீலால் ஆன ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. முதல் பெட்டி தயாரிக்கப்படுகிறது. இதன் பணி வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு பெறும். 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து பெட்டிகளும் தயாரித்து பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.

    இந்த பெட்டிகளில் அதிக இடவசதி, பாதுகாப்பு வசதி, அதிக எடைகளை தாங்கும் சஸ்பென்சன்கள், சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிக்க பெரிய ஜன்னல்கள் மற்றும் பயோ கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. பராமரிப்பு செலவு மிகவும் குறைவு.

    சென்னை ரெயில்பெட்டி தொழிற்சாலையில் இருந்து இலங்கை உள்பட வெளிநாடுகளுக்கு ரெயில் பெட்டிகள் தயாரித்து அனுப்ப படுகிறது. இந்த வருட இறுதிக்குள் 30 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×